• (571) 749-5629
  • virginiatamilsangam@gmail.com
  • Mon – Fri: 9:00am – 9:00pm
வெர்சீனியா தமிழ்ச்சங்கம் 501(C)(3) - பதிவு செய்யப்பட்ட, இலாப நோக்கமற்ற, வரிவிலக்கு பெறப்பட்ட நிறுவனம் | | Virginia Tamil Sangam - 501(C)(3) A Registered, Non-Profit, Tax-Exempted Organization வெர்சீனியா தமிழ்ச்சங்கம் 501(C)(3) - பதிவு செய்யப்பட்ட, இலாப நோக்கமற்ற, வரிவிலக்கு பெறப்பட்ட நிறுவனம் | | Virginia Tamil Sangam - 501(C)(3) A Registered, Non-Profit, Tax-Exempted Organization
  • நோக்கம்
  • உறுப்பினர்கள்
  • நன்கொடையாளர்கள்
  • தொடர்புக்கு
  • படங்கள்
    • சான்றோர்கள்
    • விழாக்கள்
      • 2023 பொங்கல் விழா
      • 2022 குளிர்கால விழா
      • 2021 கூட்டாஞ்சோறு
      • 2021 குளிர்கால விழா
      • தமிழர் துக்க நாள்
  • மடல்கள்
  • நோக்கம்
  • உறுப்பினர்கள்
  • நன்கொடையாளர்கள்
  • தொடர்புக்கு
  • படங்கள்
    • சான்றோர்கள்
    • விழாக்கள்
      • 2023 பொங்கல் விழா
      • 2022 குளிர்கால விழா
      • 2021 கூட்டாஞ்சோறு
      • 2021 குளிர்கால விழா
      • தமிழர் துக்க நாள்
  • மடல்கள்

வெர்சீனியா தமிழ்ச்சங்கத்தின் நன்கொடையாளர்/விளம்பரதாரர்களுக்கான பயன்கள்:

  • வெர்சீனியா வாழ் தமிழர்களுடன் இணைந்து, நல்லெண்ணத்தையும் உறவையும் வளர்த்துக் கொள்ள முடியும்.
  • நன்கொடையாளர்களின் இலச்சினைகள், துண்டுப் பிரசுரங்கள், விளம்பர பதாகைகள் நிகழ்ச்சி அரங்கில் மற்றும் இணையதளங்களில் முக்கியமாக காட்சிப்படுத்தப்படும், இது நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள் மற்றும் தமிழ்ச்சமூகத்தில் தங்கள் நிறுவனம் பற்றிய செய்தியை விளம்பரபடுத்தும்.
  • நன்கொடையாளர்கள் சமூகத் தலைவர்கள், சாத்தியமான வாடிக்கையாளர்கள், மற்றும் பிற வணிக நிறுவனங்களைச் சந்தித்து பேசி புதிய தொடர்புகளை தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தும்.
  • நன்கொடையாளர்கள் நிகழ்வுகளில் விளம்பரப் பொருட்களை விநியோகிக்க முடியும், இது பங்கேற்பாளர்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு சந்தைப்படுத்தும் வாய்ப்புகளை மேம்படுத்தும்.
  • நிகழ்வுகளின் போது நன்கொடையாளர்கள் மேடைகளில் அங்கீகரிக்கப்படுவார்கள், இரண்டும் மணித்துளிகள் பேசும் வாய்ப்புகள் அல்லது செய்தி வெளியீடும் வாய்ப்புகள் வழங்கப்படும்.
  • வெர்சீனியா தமிழ்ச்சங்கத்தின் இணையதளத்தில் நன்கொடையாளர்களின் விளம்பரங்கள் இடம்பெறும்,வாய்ப்புகள் வழங்கப்படும்.
  • தமிழ்ச்சமூகத்திற்கு பகிரி மூலம் விளம்பரம் அல்லது காணொளிகளை பகிர வாய்ப்புகள் உண்டு.
  • வெர்சீனியா தமிழ்ச்சங்கத்திற்கு நன்கொடை அளிப்பதன் மூலம், வெர்சீனியாவில் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கு தங்கள் வணிக நிறுவனம் பங்களிக்கின்றது, இது தங்களின் நிறுவனத்தை சமூகத்துடன் இணைக்கிறது.
Donate / Pay
Zelle_logo

treasurer.vts@gmail.com

நன்கொடையாளர்கள் விவரங்கள்

விளம்பரம்ஒரு நிகழ்வுக்கான தொகைஓர் ஆண்டுக்கான தொகை
இணையதளம் - முகப்பு பக்கம்$250$2500
முகநூல் (Facebook)$100$1000
பகிரி (WhatsApp)$100$1000
நிகழ்வு - சிறியகடை (Small stall)$300$900
நிகழ்வு - பெரியகடை (Big stall )$400$1200
மேடையில் அறிவிப்புகள் - தமிழ்ச்சங்கம் (1 மணித்துளிகள்)$100$300
மேடையில் அறிவிப்புகள் - நன்கொடையாளர்கள் (1 மணித்துளிகள்)$300$900

***மேடையில் பதாகைகளுக்கு அனுமதி இல்லை***

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்:

தகுதி: வெர்சீனியா தமிழ்ச்சங்கத்தின் நோக்கங்களுடன் ஒத்துப்போகும் வணிக நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்கும் வாய்ப்பு.

காலம்: நன்கொடை பலன்கள் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்ட நாளில் இருந்து ஒரு ஆண்டு வரை செல்லுபடியாகும்.(ஒரு நிகழ்வுக்கான தொகை அந்த நிகழ்வு நாளில் மட்டும் செல்லுபடியாகும்)

இலச்சினைகள்: நன்கொடையாளர்கள் தங்கள் இலச்சினைகள் மற்றும் பெயரை நன்கொடை அளிக்கப்பட்ட நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான விளம்பர நோக்கங்களுக்காக பயன்படுத்த வெர்சீனியா தமிழ்ச்சங்கத்திற்கு உரிமை வழங்குகிறார்கள்.

கட்டணம்: ஒப்புக்கொள்ளப்பட்ட விளம்பரபலன்களை செயல்படுத்துவதற்கு முன் நன்கொடைக் கட்டணங்கள் முழுமையாக செலுத்தப்பட வேண்டும்.

விளம்பர உள்ளடக்கம்: நன்கொடையாளர்களால் வழங்கப்படும் அனைத்து விளம்பரப் பொருட்களும் குடும்ப பார்வையாளர்களுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் மற்றும் வெர்சீனியா தமிழ்ச்சங்கத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டது.

அரங்க இடம்: நிகழ்வுகளில் அரங்க இடமானது நன்கொடையாளர்களிடையே முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒதுக்கப்படும்.

இணையதள விளம்பரம்: வெர்சீனியா தமிழ்ச்சங்கத்தின்  இணையதளத்தில் நன்கொடையாளர் விளம்பரங்கள் கிடைக்கும் இடம் மற்றும் தொழில்நுட்ப வரம்புகளுக்கு உட்பட்டவை.

தனித்துவம்: எழுத்துப்பூர்வமாக குறிப்பாக ஒப்புக்கொள்ளப்படாத வரை, வெர்சீனியா தமிழ்ச்சங்கம் எந்த ஒரு நிறுவனத்துக்கும் தனித்துவத்தை வழங்காது.

ரத்து செய்தல்: எதிர்பாராத சூழ்நிலைகளால் நிகழ்வு நீக்கம் செய்யப்பட்டால், வெர்சீனியா தமிழ்ச்சங்கம் தனது விருப்பப்படி மாற்று பலன்களை வழங்கும்.

பொறுப்பு: நிகழ்வுகள் அல்லது செயல்பாடுகளில் நன்கொடையாளர் பங்கேற்பதால் ஏற்படும் எந்தவொரு இழப்பு, சேதம் அல்லது காயத்திற்கும் வெர்சீனியா
தமிழ்ச்சங்கம் பொறுப்பாகாது.

முடிவு: நன்கொடையாளரின் செயல்கள் அமைப்பின் நற்பெயருக்கு அல்லது மதிப்புகளுக்கு தீங்கு விளைவிப்பதாகக் கருதப்பட்டால், நன்கொடையை முடிவுக்குக் கொண்டுவரும் உரிமை வெர்சீனியா தமிழ்ச்சங்கத்துக்கு உண்டு.

மாற்றங்கள்: இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் நன்கொடையாளர்களுக்கு எழுத்துப்பூர்வ அறிவிப்புடன் வெர்சீனியா தமிழ்ச்சங்கத்தால் மாற்றப்படலாம்.

ஏற்றுக்கொள்ளுதல்: வெர்சீனியா தமிழ்ச்சங்கத்துக்கு  நன்கொடை அளிக்க ஒப்புக்கொள்வதன் மூலம், நன்கொடையாளர்கள் மேற்கண்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்கிறார்கள்.

தமிழர் நலன்! தமிழர் பண்பாடு!
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

501(C)(3) - பதிவு செய்யப்பட்ட, இலாப நோக்கமற்ற, வரிவிலக்கு பெறப்பட்ட நிறுவனம்

Useful Links

  • முகப்பு
  • உறுப்பினர்கள்
  • நோக்கம்
  • தொடர்புக்கு
  • சான்றோர்கள்
  • தமிழர் விழாக்கள்
virginiatamilsangam@gmail.com Drop Us a Line
+1 (571) 749-5629 Call Us Now
4300 Poplar Branch Dr Chantilly, VA 20151
Copyright 2024 Tamil Sangam of Virginia, Inc. All rights reserved.
  • நோக்கம்
  • உறுப்பினர்கள்
  • நன்கொடையாளர்கள்
  • தொடர்புக்கு
  • படங்கள்
  • மடல்கள்